×

சில கொள்கைகளை பாஜ கைவிடாவிட்டால் கேரளாவில் ஆட்சியை பிடிக்க முடியாது: மெட்ரோமேன் ஸ்ரீதரன் பேச்சு

திருவனந்தபுரம்:   ‘சில கொள்கைகளை பாஜ கைவிடாவிட்டால் , கேரளாவில் ஆட்சியைப் பிடிக்க முடியாது,’ என்று  மெட்ரோமேன் ஸ்ரீதரன் கூறியுள்ளார். டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தலைவராக இருந்தவர் ஸ்ரீதரன். மெட்ரோமேன் என அழைக்கப்படும் இவர், ஓய்வு பெற்ற பிறகு  பாஜவில் சேர்ந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் கேரளாவில் உள்ள பாலக்காடு தொகுதியில் பாஜ சார்பில்  போட்டியிட்டார். அவரை முதல்வர் வேட்பாளராக பாஜ அறிவித்தது. ஆனால், தேர்தலில் இவர் 7,043 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். இந்நிலையில், சமீபத்தில் ஸ்ரீதரன் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசியதாவது:தேர்தல் தோல்வி முதலில் எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. எனக்கு 90 வயது ஆகிவிட்டது. இனிமேல் அரசியல் சரிப்பட்டு வராது.  கேரளாவில் பாஜ ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால் சில கொள்கைகளை அவர்கள் கைவிட வேண்டும். இது தொடர்பாக நான் பாஜ தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். அதில் நான் குறிப்பிட்ட விவரங்கள் குறித்து வெளிப்படையாகக் கூற முடியாது. இவ்வாறு அவர் பேசினார். ஸ்ரீதரனின் இந்தப் பேச்சு கேரள பாஜவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது….

The post சில கொள்கைகளை பாஜ கைவிடாவிட்டால் கேரளாவில் ஆட்சியை பிடிக்க முடியாது: மெட்ரோமேன் ஸ்ரீதரன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,Kerala ,Metroman Sreedharan ,Thiruvananthapuram ,Delhi ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...